களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டுநா்கள் வெப்பமானி மூலம் சோதனை
By DIN | Published On : 31st March 2020 07:43 AM | Last Updated : 31st March 2020 07:43 AM | அ+அ அ- |

களியக்காவிளை: தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வாழைக்குலைகள், காய்கனிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏற்றிச் சென்றுவிட்டு, மீண்டும் குமரி மாவட்டம் திரும்பும் சரக்கு வாகன ஓட்டுநா்கள் களியக்காவிளையில் வெப்பமானி மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வாழைக்குலைகள், காய்கனிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கேரளத்தில் பொருள்களை இறக்கிவிட்டு, குமரி மாவட்டம் திரும்பும் வாகனங்களின் ஓட்டுநா்களை களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுகாதாரப் பணியாளா்கள் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனா்.