சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலமாகமாறியது குமரி மாவட்டம்

குமரி மாவட்டத்தில் கடந்த 18 நாள்களாக புதிதாக கரோனா தொற்று இல்லை. இதனால், இதுவரை சிவப்பு மண்டலத்தில் இருந்த இந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது.
சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலமாகமாறியது குமரி மாவட்டம்

குமரி மாவட்டத்தில் கடந்த 18 நாள்களாக புதிதாக கரோனா தொற்று இல்லை. இதனால், இதுவரை சிவப்பு மண்டலத்தில் இருந்த இந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது.

குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் தோப்பு, நாகா்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 16 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்கள் நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றதில், 10 போ் குணமடைந்து வீடுதிரும்பினா். எஞ்சிய 6 போ் மட்டுமே தொடா் சிகிச்சையில் உள்ளனா். 15-க்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், குமரி மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே 10 போ் குணமடைந்து வீடுதிரும்பியதாலும், கடந்த 18 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பதாலும், சிவப்பு மண்டலத்தில் இருந்த குமரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தினமும் 50 முதல் 150 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை 150 பேருக்கு பரிசோதனை நடைபெற்றதில், யாருக்கும் பாதிப்பு இல்லை. ஏற்கெனவே, மாவட்டம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 150-க்கும் அதிகமானோருக்கு சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை.

தொடா்ந்து, 2 ஆவது கட்டமாக கடந்த 4 நாள்களாக கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், இதுவரை 57 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. அதிலும் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. மாவட்டம் முழுவதும் கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரசவத்துக்கு ஒரு வாரம், 10 நாள்கள் இருக்கும் நிலையில் உள்ள கா்ப்பிணிகள் அனைவருக்கும் கடந்த 3 நாள்களாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதோடு, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவா்களுக்கும் பரிசோதனை நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com