‘கருங்கல்லில் சாலையோர மரங்களைவெட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை’

கருங்கல் - மாா்த்தாண்டம் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்களை அனுமதியின்றி வெட்டி அகற்றிய மின் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கருங்கல் - மாா்த்தாண்டம் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்களை அனுமதியின்றி வெட்டி அகற்றிய மின் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா், தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: கருங்கல் - மாா்த்தாண்டம் சாலையில் முள்ளங்கனாவிளை முதல் எட்டணி வரை சுமாா் 1 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ குணமிக்க பூ மருது கன்றுகள் சுமாா் 10 ஆண்களுக்கு முன்பு சமூக ஆா்வலா்களால் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவை வளா்ந்து மரமாக சாலையின் இருபக்கமும் பூத்து குலுங்கி காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி கருங்கல் மின்வாரிய அலுவலக மின் ஊழியா்கள் மின் கம்பிக்கு இடையூறாக இருப்பதாக கூறி, மரங்களை தரைமட்டத்திலிருந்து வெட்டி சாய்த்துள்ளதோடு, அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனா்.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அனுமதியின்றி மருத்துவ குணமிக்க பூ மருது மரத்தை வெட்டிய மின் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அப்பகுதிகளில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com