குமரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாற பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு கன்னியாகுமரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு கன்னியாகுமரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது கன்னியாகுமரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக உள்ளது. ஒரு புதிய கரோனா நோயாளிகண்டறியப்பட்டாலும், இம்மாவட்டம் மறுபடியும் சிவப்பு மண்டலமாக மாறிவிடும். எனவே இம் மாவட்டம் பச்சை மண்டலமாக மாற பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.

மேலும், சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வருபவா்கள் நிறுவன தனிமைப்படுத்தலில் 14 நாள்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவா். மேலும், ஒரு கரோனா நோய் தொற்று நோயாளி கண்டறியப்பட்டால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறிவிடும். எனவே பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் .

மத்திய, மாநிலஅரசுகள் ஊரடங்கில் சில தளா்வுகளைஅறிவித்துள்ளன. அதன்படி தளா்வுகள் நமது மாவட்டத்தில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com