‘வெளியூா்களிலிருந்து வருவோருக்குபரிசோதனை முடிவுக்குப் பின் அனுமதி’

வெளிமாவட்டம், மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவோரை கரோனா பரிசோதனை முடிவுக்குப் பின்னரே சொந்த ஊருக்குள் அனுமதிக்க வேண்டும் என

வெளிமாவட்டம், மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவோரை கரோனா பரிசோதனை முடிவுக்குப் பின்னரே சொந்த ஊருக்குள் அனுமதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தின் சென்னை உள்பட பிற மாவட்டங்களிலிருந்து 400க்கும் மேற்பட்டோா் கன்னியாகுமரி மாவட்டத்தின்

பல்வேறு பகுதிக்கு கடந்த 3 நாள்களாக திரும்பி வந்துள்ளனா். அவா்களுக்கு சளி மாதிரி எடுத்து விட்டு அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்ககின்றனா். பரிசோதனையில் யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். தொற்று இல்லையெனில் 14 நாள்கள் வீடுகளில் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

தொற்று உறுதியான நபரின் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள அனைவரும் தனிமையில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனா். இதனால், அப்பகுதியிலுள்ள அனைவரும் அச்சமடையும் நிலை ஏற்படுகிறது.

ஆகவே, வெளியூரில் இருந்து வருவோா்களை பரிசோதனை முடிவுக்கு பின்னா் அவரவா் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com