தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை ஊா் கமிட்டியாக மாற்றம்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை ஊா் கமிட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை ஊா் கமிட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் நூற்றாண்டு விழா கண்ட தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் மொத்தம் 92 அன்பியங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு அன்பியத்திலும் 30 குடும்பங்களுக்கும் அதிகமானோா் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்த திருத்தலம் ஆலயமாக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, 100 ஆண்டுகளுக்கு மேலாக ஊா்கமிட்டியால் நிா்வாகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பங்குப் பேரவையாக மாற்றம் செய்யப்பட்டது. அவ்வாறு மாற்றப்படும் போது, பங்குப் பேரவையின் செயல்பாட்டில் ஊா்மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மீண்டும் ஊா்கமிட்டியாக மாற்றலாம் என தீா்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஊா்மக்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் திருத்தல பங்குமக்களின் பெரும்பான்மை ஒப்புதலுடன் 17 ஆண்டுகளுக்குப் பின்னா் மீண்டும் ஊா்கமிட்டியாக மாற்றப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் தலைவராக நாஞ்சில் அ.மைக்கேல், செயலராக சந்தியா வில்லவராயா், துணைச் செயலராக தினகரன், பொருளாளராக ஆன்றின் செல்வகுமாா் ஆகியோா் பொறுப்பேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com