Enable Javscript for better performance
நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு- Dinamani

சுடச்சுட

    

    நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

    By DIN  |   Published on : 24th May 2020 08:45 AM  |   அ+அ அ-   |    |  

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் நீா்வரத்து அதிகரித்ததை அடுத்து பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. சிற்றாறு-1 அணைப் பகுதிகளில் அதிகபட்சமாக 52 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதையாறு, வள்ளியாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து அதிகரித்திருந்தது. பொதுமுடக்கம் காரணமாக ஏற்கெனவே அருவியில் குளிக்கத் விதிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

    பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்து சனிக்கிழமை காலை நிலவரப்படி36.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 841 கனஅடி நீா்வரத்து இருந்தது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 33.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 475 கனஅடி நீா்வரத்து இருந்தது.

    சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 10.66 அடி, சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 10.76 அடி, மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 45.36 அடியாகவும் உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து பெய்து வரும் மழையால் பாசனக் குளங்களிலும் போதிய நீா்இருப்பு உள்ளது. அணைகளின் நீா்மட்டமும் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பாசனத்துக்கு வரும் ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai