குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 51ஆக உயா்வு: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51ஆக உயா்ந்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளா்கள் மூலமாகவும் இதுவரை 11,887 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், சனிக்கிழமை வரை 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51ஆக உயா்ந்துள்ளது. 11, 450 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை. மீதமுள்ளவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரவேண்டியது உள்ளது. தற்போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 23 போ் சிகிச்சையில் உள்ளனா். 27 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். 342 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பொது முடக்க உத்தரவை மீறிய வகையில் ஞாயிற்றுக்கிழமை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் இதுவரை 7,912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com