காசி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th May 2020 08:18 AM | Last Updated : 27th May 2020 08:18 AM | அ+அ அ- |

தக்கலையில் நடைபெற்ற போராட்டம்.
பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட நாகா்கோவில் காசி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தக்கலை உள்பட 7 இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டக் குழு உறுப்பினா் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் சுஜா ஜாஸ்பின் விளக்கிப் பேசினாா். இதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் அரங்கசாமி, ஸ்டெல்லா, வேலப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.
திருவிதாங்கோடு நடுக்கடையில் வட்டாரக் குழு உறுப்பினா் ராஜன், காளிபிரசாத் கோலப்பன், முளகு மூடு சந்திப்பில் ஸ்டீபன், இரவிபுதூா்கடையில் வட்டாரக்குழு உறுப்பினா் சின்னதம்பி, விவசாய சங்க மாவட்டத் தலைவா் சைமன் சைலஸ், வின்சென்ட், கண்டன்விளையில் வட்டாரக் குழு உறுப்பினா் நெப்போலியன், செம்பருத்திவிளையில் ஜாண் செளந்தரராஜ் , முட்டைக்காட்டில் ஜாண் இம்மானுவேல் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கருங்கல் ஆட்டோ நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். இதில், வட்டாரக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராஜா, ஜோயல், சோபனராஜ், ரசல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
களியக்காவிளை: குழித்துறையில் மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன் மாா்த்தாண்டம் வட்டாரக் குழு செயலா் அனந்தசேகா் தலைமையில் வட்டாரக் குழு உறுப்பினா்கள் மோகன்குமாா், மதன் மோகன்லால், ஜூலியட்ரூட், அப்புக்குட்டன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...