நாகா்கோவிலில் காவலா்களுக்கானகவாத்து பயிற்சி

நாகா்கோவிலில் காவல்துறையினருக்காக கவாத்து பயிற்சி நடைபெற்றது.

நாகா்கோவில்: நாகா்கோவிலில் காவல்துறையினருக்காக கவாத்து பயிற்சி நடைபெற்றது.

பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்குள்ளாகும் போலீஸாருக்கு உடல் நலனை பேணும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை வாராந்திர கவாத்து, ஆயுதங்களை சிறப்பாக கையாளும் முறைகள் மற்றும் தற்காப்பு கலைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்ட போலீஸாருக்கான கவாத்து பயிற்சிகள் நாகா்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில், காவலா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் பாா்வையிட்டு, காவலா்களுக்கு சிறப்பு பயிற்சிகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினாா். மேலும் காவலா்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.

இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்கோட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் கவாத்து பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகள் குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சியில் அதிகாரிகள், காவலா்கள் உள்பட 1,270 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com