குமரி மாவட்ட புகைப்பட கலைஞா்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 01st November 2020 01:20 AM | Last Updated : 01st November 2020 01:20 AM | அ+அ அ- |

கருங்கல்: கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாா்த்தாண்டத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். சங்கத் துணைச் செயலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். சங்கப் பொருளாளா் ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்கள் சந்தோஷ், மாதவன், பாபு, நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சங்க நிா்வாகிகள் 2021 இல் ஜனவரி மாதம் பொறுப்பு ஏற்பது, புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்களுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.