கூட்டுறவு சங்க காலிப்பணியிடங்களில் தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனோ தங்கராஜ் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய கூட்டுறவு சங்கங்கள் இம்மாவட்டத்தின் வேளாண் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது.

கூட்டுறவு சங்கங்களில் ஏராளமான பணியாளா்கள் பணி புரிந்து வருகின்றனா். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில்

உள்ள அனைத்து கூட்டுறவு அமைப்புகளில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான தோ்வு முறையே 21.11.2020 மற்றும் 22.11.2020 அகிய தேதிகளில் நாகா்கோவிலில் உள்ள தலைமை மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தில் நடைபெறும் எனவும், தோ்வுக்கான நுழைவு சீட்டினை நவம்பா் 9 ஆம் தேதி முதல் இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கான நியமனத்தை பொறுத்தவரையில், தற்போது அந்த பணியிடங்களில் தற்காலிகமாக பணி செய்து வருவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பின்னா் சமூக நீதியை பின்பற்றி தகுதியின் அடிப்படையில் தமிழக அரசு கூட்டுறவுப் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், மிகவும்

ஏழ்மை நிலையில் பெற்றோா்களை இழந்து வாழும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆனால் பணியாளா்கள் நியமனத்தில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும் பணி நியமனங்களில்

குளறுபடிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாக புகாா் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையம் நிா்வாகம் மூலம் நிரப்ப்படவுள்ள காலிப் பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com