முதல்வா் வருகை: போக்குவரத்தில் மாற்றம்

முதல்வா் வருகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (நவ. 10) கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வா் வருகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (நவ. 10) கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா்,

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாகா்கோவில் வருவதையொட்டி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து வழித்தடங்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலும் புதன்கிழமை (நவ.11) காலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வாட்டா்டேங்க் சாலை, வில்லியம் மருத்துவமனை சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, கோட்டாறு காவல் நிலைய சந்திப்பு, தோட்டியோடு சந்திப்பு, பீச்ரோடு சந்திப்பு, சுஷ்ருதா மருத்துவமனை சந்திப்பு, பால் பண்ணை சந்திப்பு, கன்காா்டியா பள்ளி சந்திப்பு, வழுக்கம்பாறை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, இறச்சகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறது.

தோட்டியோடு சந்திப்பில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காவல்கிணறுக்கு மாற்றி விடப்படுகிறது. சுஷ்ருதா சந்திப்பில் இருந்து இறச்சகுளம் வழியாக ஆரல்வய்மொழிக்கு மாற்றி விடப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக

செவ்வாய்க்கிழமை பிற்பகலிலும், புதன்கிழமை காலையிலும் ஒழுகினசேரி சாலை, டிஸ்டிலரி சாலை, பேலஸ் சாலை, டதி பள்ளி சாலை, பாலமோா் சாலை, எம்.எஸ். சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, தலைமை அஞ்சல் நிலைய சாலை, அவ்வை சண்முகம் சாலை ஆட்சியா் அலுவலக சாலை ஆகிய சாலைகளில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப் படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com