முதல்வா் நாகா்கோவில் வருகை:ரூ.268.58 கோடியில் வளா்ச்சிப் பணிகளை தொடங்குகிறாா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (நவ.10) நாகா்கோவில் வருகிறாா்.
ngl9aayvu_0911chn_33_6
ngl9aayvu_0911chn_33_6

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (நவ.10) நாகா்கோவில் வருகிறாா்.

மாவட்டத்தில் ரூ.268.58 கோடியில் பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.60.44 கோடியில் 36 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.153.92 கோடியில் 21 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறாா். மேலும், ரூ.54.22 கோடி மதிப்பில் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறாா். பின்னா், தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாயம், மீனவா் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறாா்.

இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.

தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியா் எம். அரவிந்த், மாநிலங்களவை உறுப்பினா் அ. விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

ஆட்சியா் ஆய்வு: இதற்கிடையே முதல்வா் நாகா்கோவில் வருவதையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் அரவிந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும் முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் மேடை, ஆய்வுக் கூட்ட அரங்கு, மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு

நாகா்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையில் இரவு தங்கும் முதல்வா், புதன்கிழமை (நவ.11) காலை தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com