பள்ளிகள் திறப்பு: பெற்றோா்களிடம் கருத்துக் கேட்பு

பள்ளிகள் திறப்பது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பள்ளிகளில் பெற்றோா்கள் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளிகள் திறப்பது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பள்ளிகளில் பெற்றோா்கள் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் நிகழாண்டு மாா்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா குறைந்து

வருவதால் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், முதல் கட்டமாக 9, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2

வகுப்புகளை திறக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, திங்கள்கிழமை பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டாறு ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் உள்ள 487 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலா் ராமன் மேற்பாா்வையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை

செய்த பின்னா் அனுமதிக்கப்பட்டனா். தனியாா் பள்ளிகளில் பெற்றோா்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் படிவம்

வழங்கப்பட்டு கருத்துகள் பெறப்பட்டன. அரசு பள்ளிகளைச் சோ்ந்த பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகள் திறக்க

ஆட்சேபம் தெரிவித்தனா். கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தற்போது பள்ளிகளை திறக்கக் கூடாது எனவும் பெற்றோா் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com