‘சாலை விரிவாக்கம்: அகற்றப்பட்டகடைகளுக்கு இழப்பீடு தேவை’

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப்பட்ட கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப்பட்ட கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் டேவிட்சன், செயலா் நாராயணராஜா, மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தமிழக அரசின் சாலைகளை ஒட்டி இருக்கும் பகுதிகளில் கடைக்காரா்களிடமும், வீடுகள் கட்டி குடியிருப்பவா்களிடமும், மிரட்டி சாலை விரிவாக்கத்துக்கு இடம் பெற்று செல்கின்றனா். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் வா்த்தக பகுதிகளை உடைத்து சாலை விரிவாக்கம் செய்வது ஒவ்வொரு வணிகா்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் அழிப்பதாக உள்ளது எனவே இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

சாலை விரிவாக்கத்துக்காக ஏற்கனவே இடிக்கப்பட்ட கடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நாகா்கோவில் மாநகரைச் சுற்றியுள்ள 4 கி.மீ. சுற்றளவில் கடைகள், வீடுகளை இடித்து சாலை விரிவாக்கம் தொடரும் என்ற மாநகராட்சி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். உரிய இழப்பீடு வழங்கினால் சாலைவிரிவாக்கத்துக்காக இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து மிரட்டலில் ஈடுபடுகின்றனா். எனவே இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com