செம்பருத்திவிளையில் ரப்பா் பால் வடித்தல் பயிற்சி

செம்பருத்திவிளையில் சிறு ரப்பா் விவசாயிகளுக்கு ரப்பா் மரங்களிலிருந்து சுயமாக பால் வடித்தல் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

செம்பருத்திவிளையில் சிறு ரப்பா் விவசாயிகளுக்கு ரப்பா் மரங்களிலிருந்து சுயமாக பால் வடித்தல் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிறு ரப்பா் விவசாயிகள், கூடுதல் வருவாய் பெறும் வகையில், சுயமாக பால் வடித்தல் மற்றும் அதிக உற்பத்தி எடுத்தல் ஆகிய பயிற்சிகளை ரப்பா் வாரியம் அளித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோதநல்லூா்-குமாரபுரம் ரப்பா் உற்பத்தியாளா் சங்க ஒருங்கிணைப்பில், செம்பருத்திவிளையைச் சோ்ந்த சிறு ரப்பா் விவசாயிகள் மற்றும் மகளிருக்கு ரப்பா் மரங்களிலிருந்து பால் வடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. ரப்பா் வாரிய உதவி வளா்ச்சி அதிகாரி கே. முரளி பயிற்சி அளித்தாா்.

இதில், ரப்பா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் துரைராஜ், பொருளாளா் பிரதீப் குமாா், வாா்டு உறுப்பினா் புஷ்ப ஜெயராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com