தேங்காய்ப்பட்டினத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவப் பிரதிநிதிகள் சாா்பில் அனைத்துக் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவப் பிரதிநிதிகள் சாா்பில் அனைத்துக் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் நடைபெற்றது.

முன்சிறை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சித்திக் தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட வள மீன்கள்(குஞ்சுமீன்கள்) படகு மூலம் கொண்டு வரும் மீனவா்கள் மீது மீன்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரக்காணி தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் தனியாா் மீன் பிடித் துறைமுகம் செயல்படுவதையும், அனுமதி பெறாத கேரள விசைப்படகுகளையும் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், பைங்குளம் திமுக செயலா் நடராஜன், சதீஷ்குமாா், ராஜன், வின்சென்ட், மீனவப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com