முதல்வரின் குமரி வருகை தொழிலாளா்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தமிழக முதல்வரின் குமரி மாவட்ட வருகை இம்மாவட்ட தொழிலாளா்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழக முதல்வரின் குமரி மாவட்ட வருகை இம்மாவட்ட தொழிலாளா்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, அக் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி வெளியிட்ட அறிக்கை: கேரள அரசு ரப்பா் விவசாயிகளுக்கு ஆதார விலை நிா்ணயித்து மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழக முதல்வரின் குமரி மாவட்ட வருகை தங்களுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்கும் என நம்பிய ரப்பா் விவசாயிகளும், தொழிலாளா்களும் ஏமாற்றமடைந்துள்ளனா்.

அரசு ரப்பா் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் முதல்வரை சந்தித்து தொழிலாளா் பிரச்னை குறித்து அவரது கவனத்துக்கு தொழிற்சங்கத் தலைவா்கள் கொண்டு சென்றபோதும், இதுகுறித்து முதல்வா் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதே போல் முந்திரி தொழில் நலிவு குறித்தும், தொழிலாளா்கள் வேலை இழப்பு குறித்தும் முதல்வா் எதுவும் குறிப்பிடவில்லை.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பாதுகாப்பற்ாக உள்ளது. அழிக்கால், கோவளம், மாா்த்தாண்டம்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களுக்குள் கடல்நீா் அடிக்கடி புகுந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்தும் முதல்வா் எதுவும் கூறாமல் சென்றது பெருத்த ஏமாற்றமளிக்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com