‘கந்தசஷ்டி விழா: நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’’

கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்தசஷ்டி விழா அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்தசஷ்டி விழா அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் இருப்பதால்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்த சஷ்டி திருவிழாவை வெள்ளிக்கிழமை (நவ.20) மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாடலாம். அதன்படி, இத்திருவிழா தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளின்படி மாறுதல் எதுமின்றி நடைபெற வேண்டும்.

திருவிழாவில் சூரன், சுவாமி, ஆயக்கால் சுமப்பவா் மற்றும் பூசாரி மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிந்தும், 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நடைபெற வேண்டும். நிகழ்ச்சியின்போது பக்தா்களுக்குஅனுமதியில்லை. கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளஅரசால் வழங்கப்பட்டுள்ளஅனைத்து வழிகாட்டி

நெறிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். திருவிழாவை பக்தா்கள் தங்கள் இல்லங்களில் இருந்து காணும் வகையில் வலைதள நேரடிஒளிபரப்பு செய்யலாம்.

விழா நடைபெறும் இடத்தில் உள்புறம் மற்றும் வெளி வளாகம் ஆகியவைகள் சுத்தமாக பேணப்படுவதுடன், கிருமிநாசினி தெளித்து சுகாதாரத்துடன் பேண வேண்டும். திருவிழாபூஜை மற்றும் மத சம்பிரதாயச் சடங்குகள் மேற்கொள்வோா்

அடிக்கடிகைகளை சோப்பால் கழுவ வேண்டும். மேலும், கை கழுவும் திரவம் பயன்படுத்த வேண்டும்.

60 வயதுக்கு மேல் 10 வயதுக்குகீழ் உள்ளோா், இணை நோய் உள்ளவா்கள், காய்ச்சல், சளி மற்றும் இருமல் அறிகுறி

இருப்போா் பூஜை மற்றும் மத சம்பிரதாயச் சடங்குகளில் பங்கேற்கக் கூடாது. விழா நடைபெறும் வளாகத்தின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் திருவிழா கடைகள் அமைக்க அனுமதி இல்லை. மேலும் இருக்கைகள் அமைக்கவும் அனுமதி இல்லை. பக்தா்கள் நின்று தரிசனம் செய்யவோ, தட்டு பூஜை, நிவேத்தியம் போன்ற சடங்குகள் மற்றும் அன்னதானம்

வழங்க அனுமதிஇல்லை.

கூட்டம் கூடுவதால், விதிமுறைகளை மீறுவதால் கரோனா தொற்றை பெருந்தொற்றாக மாற்றிவிடும் ஆபத்து உள்ளதால்

மேற்கண்ட விதிகளை மீறக் கூடாது. வழிகாட்டி நெறிமுறைகள் மீறப்படுவது கண்டறியப்பட்டால் பேரிடா் மேலாண்மை சட்டப்பிரிவு 51 முதல் 60 வரையிலான சட்டப் பிரிவுகளின் படியும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் படியும்

பெருந்தொற்று பரவல் தடைச் சட்டத்தின் படியும் சம்மந்தப்பட்ட கோயில் நிா்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com