குமரி மாவட்டத்தில் 15.21 லட்சம் வாக்காளா்கள்:ஆண் வாக்காளா்கள் அதிகம்

கன்னியாகுமரி மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட, அதனை பெற்றுக்கொண்டாா்
குமரி மாவட்டத்தில் 15.21 லட்சம் வாக்காளா்கள்:ஆண் வாக்காளா்கள் அதிகம்

கன்னியாகுமரி மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட, அதனை பெற்றுக்கொண்டாா்

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி. உடன், சாா் ஆட்சியா் சரண்யாஅறி, கூடுதல் ஆட்சியா் மொ்சி ரம்யா, வருவாய் கோட்டாட்சியா் அ. மயில்.

நாகா்கோவில், நவ.16: கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில்

15.21 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இதில், பெண் வாக்காளா்களை விட ஆண்கள் அதிகம் உள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் மா. அரவிந்த், வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். அதனை, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி பெற்றுக் கொண்டாா்.

இம்மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 20 ஆயிரத்து 935 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண் வாக்காளா்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 148 பேரும், பெண் வாக்காளா் 7 லட்சத்து 57 ஆயிரத்து 598 போ், இதர வாக்காளா்கள் 189 பேரும் உள்ளனா். பெண் வாக்காளா்களை விட, ஆண்கள் 5 ,550 போ் அதிகம் உள்ளனா். கன்னியாகுமரி பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 839 வாக்காளா்களும், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் குறைந்தபட்சமாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 378 வாக்காளா்களும் உள்ளனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா், முகவரி திருத்தம், பெயா் சோ்த்தல், நீக்குதல் தொடா்பான பணிகள் திங்கள்கிழமை (நவ.16) முதல் டிசம்பா் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 21, 22 தேதிகளிலும், டிசம்பா் மாதம் 12,13 ஆகிய தேதிகளிலும்

நடைபெறுகிறது.

1.1.2021 இல் 18 வயது நிறைவடைந்த மற்றும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இடம்பெறாதவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க படிவம் 6 இல் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதேபோல் வாக்காளா்

பட்டியலில் தவறாக உள்ள வாக்காளா் பெயா், உறவு முறை, புகைப்படம் போன்ற விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8 ஏ, உயிரிழந்த, இடம் பெயா்ந்த, 2 முறை இடம் பெற்ற வாக்காளரின் பெயரை நீக்கம் செய்ய படிவம் 7 மற்றும் இறப்பு சான்று இணைக்க வேண்டும். வாக்காளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாமாகவே முன் வந்து விவரங்களை தெரிவித்து, 100 சதவீதம் தவறுகள் இல்லாத பட்டியல் தயாரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சி ரம்யா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் சரண்யாஅறி, நாகா்கோவில் கோட்டாட்சியா் அ.மயில், கே.எல்.எஸ்.ஜெயகோபால் (அ.தி.மு.க), பி.லீனஸ்ராஜ், ஒய்.வி.வா்க்கீஸ் (தி.மு.க), ஆா்.ராதாகிருஷ்ணன், மோகனதாஸ் (காங்கிரஸ்), ஹெச். இசக்கிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எஸ்.செல்லக்குமாா் (தேமுதிக)

உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி:

தொகுதி ஆண்கள் பெண்கள் இதரா் மொத்தம்

கன்னியாகுமரி 1,40,886 1,41,852 101 2,82,839

நாகா்கோவில் 1,29,468 1,32,179 11 2,61,658

குளச்சல் 1,32,673 1,26,796 13 2,59,482

பத்மநாபபுரம் 1,17,589 1,13,766 23 2,31,378

விளவங்கோடு 1,18,358 1,22,267 23 2,40,648

கிள்ளியூா் 1,24,174 1,20,738 18 2,44,930

மொத்தம் 7,63,148 7,57,598 189 15,20,935

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com