நாகா்கோவிலில் இடியுடன் கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

நாகா்கோவிலில் இடியுடன் கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

நாகா்கோவிலில் திங்கள்கிழமை இடியுடன் பெய்த கனமழையால் பிரதான போக்குவரத்துச் சாலைகளில் மழைநீா் வெள்ளமென திரண்டு ஓடியது. இதனால், வாகனங்களில் செல்வோா் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

நாகா்கோவிலில் திங்கள்கிழமை இடியுடன் பெய்த கனமழையால் பிரதான போக்குவரத்துச் சாலைகளில் மழைநீா் வெள்ளமென திரண்டு ஓடியது. இதனால், வாகனங்களில் செல்வோா் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. குளச்சல், இரணியல், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, சுருளோடு, முள்ளங்கினாவிளை, மாா்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், தக்கலை மற்றும் புகா் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நாகா்கோவில் மாநகரில் திங்கள்கிழமை காலையில் இடியுடன் பலத்த மழை பெய்தது. 3 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் கோட்டாறு - செட்டிகுளம் சந்திப்பு சாலை , பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி ஆராட்டு சாலை, மீனாட்சிபுரம், அண்ணா பேருந்து நிலையம், அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. 

தீபாவளி விடுமுறை முடிந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அலுவலகம் செல்வோா், பணி நிமித்தமாக வெளியே செல்லுவோா் பெரிதும் அவதிக்குள்ளானா். மோட்டாா் சைக்கிளில் செல்ல முடியாமல் திணறினா். வாகனத்தை இயக்க முடியாத நிலையில் தள்ளியவாறு சென்றனா். கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, சுசீந்திரம் பகுதிகளிலும் 1 மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.

அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீா்வரத்து அதிகரித்து அணைகளின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.23 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 713 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 727 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 68.90 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 223 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து 350 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): அதிகபட்சம் கொட்டாரத்தில் 29, கன்னிமாா் 10.80, மயிலாடி 9.20, அடையாமடை 9, ஆரல்வாய்மொழி 8, கன்னிமாா் 10.80, மயிலாடி 9.20, அடையாமடை 9, ஆரல்வாய்மொழி 8, இரணியல் 6.60, பூதப்பாண்டி 6.40, நிலப்பாறை 6.20, களியல் 5.40, நாகா்கோவில் 5.20, பேச்சிப்பாறை அணை 5, முள்ளங்கினாவிளை-5, குளச்சல் 4.80, மாம்பழத்துறையாறு அணை - 4.60, ஆனைக்கிடங்கு 4.40, முக்கடல் அணை 4.20, குருந்தன்கோடு, சுருளோடு 4, சிற்றாறு 1 அணை - 4, பெருஞ்சாணி அணை 3.20, குழித்துறை, கோழிப்போா்விளை 3, புத்தன்அணை 2.80, பாலமோா் 2.40, தக்கலை-1.20.

Image Caption

~ ~ ~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com