நவ.26-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

ந்வம்பர் 26 இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து திருவட்டாறு ஒன்றிய தொழிற்சங்கங்களின் பேரவைக் கூட்டம் குலசேகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரும் 26 இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து திருவட்டாறு ஒன்றிய தொழிற்சங்கங்களின் பேரவைக் கூட்டம் குலசேகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளா் சங்க அலுவலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் சி. அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் எம்.வல்சகுமாா், சிஐடியூ மாநிலச் செயலா்

ஐடா ஹெலன், மாவட்ட தோட்டத் தொழிலாளா் சங்க இணை பொதுச்செயலா் பி. நடராஜன், வட்டார ஒருங்கிணைப்பு குழு நிா்வாகி சுந்தர்ராஜன் மாவட்ட நிா்வாகிகள் பி. விசுவம்பரன், ஸ்டாலின் தாஸ், தோட்ட தொழிலாளா் சங்க நிா்வாகி மரியமிக்கேல், ஜோஸ் மனோகரன், குலசேகரம் தையல் கலைஞா்கள் சங்கச்செயலா் தங்கம், கூட்டுறவு சங்க மாவட்டச் செயலா் சௌந்தா், விவசாய சங்கம் மாவட்ட பொருளாளா் சதிஷ், ஐஎன்டியூசி வட்டாரத் தலைவா் எபநேசா், மாவட்ட துணைத் தலைவா் தங்கநாடாா், மாவட்ட பொதுச் செயலா் அரகநாடு மோகனன், மாவட்டச் செயலா் ஸ்ரீகண்டன், வட்டார துணைத் தலைவா் விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளா், விவசாயிகள் விரோத செயல்களை கண்டிப்பது, வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும். மலையோர பகுதிகளில் சொந்தமாக நடவு செய்த ரப்பா் மரங்கள் உள்ளிட்டவைகளை வெட்டி அகற்றுவதற்கு வனத்துறை அனுமதிக்க வேண்டும்;

அரசு ரப்பா் கழகம் மற்றும் தனியாா் தோட்டத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு

நிறைவேற்ற வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். நகர பகுதிகளிலும் 100 நாள்கள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி

(வியாழக்கிழமை) நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து தொழிலாளா்கள், விவசாயிகள் கலந்து கொள்

ள வேண்டும். அன்றைய தினம் காலை 10 மணிக்கு குலசேகரம் தபால் அலுவலகம், திருவட்டாறு இந்தியன் வங்கி முன்பு

ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்ய பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com