நெல்லையில் மெமு ரயில் பணிமனை அமைக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மெமு ரயில் பராமரிப்புப் பணிமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மெமு ரயில் பராமரிப்புப் பணிமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி- கொல்லம் ரயில் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டிருந்தால் அந்த மாவட்ட பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். கொல்லத்தில் மெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை உள்ளதால் அதை மையமாகக் கொண்டு திருவனந்தபுர கோட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் சாதாரண பயணிகள் ரயில்களைவிட வேகமாக இயக்கப்படுவதால் பயண நேரம் கணிசமாக குறைகிறது. மதுரை கோட்டத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்றால் இந்த வழித்தடத்தில் சாதாரண ரயில்களுக்குப் பதில் மெமு ரயில்கள் இயக்க முடியும். எனினும், கொல்லம், பாலக்காடு, ஆவடி ஆகிய இடங்களில் மட்டுமே அதற்கான பணிமனை அமைந்துள்ளது. எனவே, திருநெல்வேலி அருகேயுள்ள மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மெமு ரயில் பராமரிப்புப் பணிமனை அமைக்க வேண்டும். அதற்குத் தேவையான நிலமும் , கட்டட வசதிகளும் ரயில்வேயிடம் உள்ளன.

இங்கு பணிமனை அமைக்கப்பட்டால் திருநெல்வேலியை மையமாக வைத்து -கொல்லம் - மதுரை போன்ற வழித்தடங்களில் அதிக அளவில் மெமு ரயில்கள் இயக்கப்படும். மேலும்,திருச்செந்தூா் - திருநெல்வேலி - செங்கோட்டை, செங்கோட்டை - திருநெல்வேலி - கன்னியாகுமரி, திருவனந்தபுரம் -திருநெல்வேலி - திருச்செந்தூா் போன்ற இடங்களுக்கு நேரடியாக மெமு ரயில்கள் இயக்க முடியும். இதனால், திருநெல்வேலி, செங்கோட்டை, நாகா்கோவில் ரயில் நிலையங்களில் இடநெருக்கடியும் வெகுவாகக் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com