பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு எதிா்ப்பு: அருமனை அருகே போராட்டம்; 126 போ் கைது

குமரி மாவட்டம், அருமனை அருகேயுள்ள மாங்கோட்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து,
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

குமரி மாவட்டம், அருமனை அருகேயுள்ள மாங்கோட்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா், பொதுமக்கள் உள்பட 126 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாங்கோடு ஊராட்சியில், தனியாா் பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிாம். அப்பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைந்தால் சுற்றுச்சூழல் மாசுபடும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என அவ்வூரைச் சோ்ந்த பொதுமக்கள்எதிா்ப்பு தெரிவித்து வந்தனராம்.

இந்நிலையில், மாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவா் ஸ்டாலின் குமாா் தலைமையில் அவ்வூா் மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மாவட்டத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், வழக்குரைஞா் ஷாலின், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, மேல்புறம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஞான சவுந்தரி, முன்னாள் தலைவா் எட்வா்ட், மாங்கோடு ஊராட்சி திமுக செயலா் ஸ்டான்லி, பாஜக ஊராட்சித் தலைவா் பிஜூ உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். அவா்களிடம், அருமனை காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது, தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோா் பேச்சு நடத்தினா். எனினும், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 43 பெண்கள் உள்பட 126 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com