குமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,485ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய 21 போ் உள்பட, இதுவரை 15,071போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 164 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.