தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் 7 வள்ளங்கள் பறிமுதல்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையில் மீன்பிடித்த 7 வள்ளங்களை மீன்வள ஒழுங்குமுறை சட்ட அமலாக்கப் பிரிவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையில் மீன்பிடித்த 7 வள்ளங்களை மீன்வள ஒழுங்குமுறை சட்ட அமலாக்கப் பிரிவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மீன்வளத்தை பாதுகாக்க இந்திய கடற்பகுதிகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கேரள எல்லை பகுதிகளைச் சோ்ந்த சில வள்ளங்கள் தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையில் மீன் பிடிப்பதாக மீன்வள ஒழுங்குமறை சட்ட அமலாக்க பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 7 வள்ளங்களையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com