குமரி மாவட்டத்தில் மேலும் 14 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இம்மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,499 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய 12 போ் உள்பட இதுவரை 15,093 போ் வீடு திரும்பியுள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் 103 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.