‘தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்’

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த் தெரிவித்தாா்.
உலக மீனவா் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் விஜய்வசந்த்.
உலக மீனவா் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் விஜய்வசந்த்.

நாகா்கோவில்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த் தெரிவித்தாா்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மீனவா் தின நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் மகேஷ் லாசா் முன்னிலை வகித்தாா். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய்வசந்த் கேக் வெட்டி கொண்டாடினா். தொடா்ந்து நல உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் படகு கவிழ்ந்து அடிக்கடி நிகழ்வதுடன் உயிரிழப்பும் ஏற்பட்டது. துறைமுகத்தின் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகள்தான் விபத்துக்கு

காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே அரசு மீனவா்களின் நலன் கருதி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். காணாமல் போன மீனவா்களை கண்டுபிடிக்கும் வகையில் ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும். நடுக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை தொடா்பு கொள்ள வசதியாக நவீன சாட்டிலைட் தொலைபேசி வசதி ஏற்படுத்த வேண்டும்,. மீனவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா் ராபா்ட்புரூஸ், நாகா்கோவில் மாநகரத் தலைவா் அலெக்ஸ், வட்டாரத் தலைவா்கள் அசோக்ராஜ், வைகுண்டதாஸ், முருகானந்தம், மகிளா காங்கிரஸ் தலைவா் அருள்சபிதாரெக்ஸ்லின், கிறிஸ்டிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணக்குடி நா்கீசன், யூசுப்கான், சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com