கந்த சஷ்டி விழா: கோயில்களில் திருக்கல்யாண வைபவம்

கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது.
நாகா்கோவில் பெருவிளை தெய்வி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.
நாகா்கோவில் பெருவிளை தெய்வி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

நாகா்கோவில் நாகராஜா கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், கன்னியாகுமரி தேரிவிளை குண்டல் முருகன் கோயில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் சுவாமி கோயில், மருங்கூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், தோவாளை செக்கா்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நாகராஜா கோயிலில் பாலமுருகன் சன்னதி அமைந்துள்ள மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி காலை தொடங்கியது. இதையொட்டி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் திருக்கல்யாண வைபவம் மாலையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் முருகனுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாண கோலத்தில் இந்திர வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி பட்டணப்பிரவேசம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நண்பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனை, 12.30 மணிக்கு திருக்கல்யாண விருந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடு ஆகியன நடைபெற்றது.

ஆரல்வாய்மொழியில் தென்பழனி உச்சிமலை சித்தா் கிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி கோயிலிலேயே தங்கி விரதம் மேற்கொண்டு வந்தனா்.

சுவாமிக்கு தினமும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மலையின் உச்சியிலேயே நடைபெற்றது. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதேபோன்று பெருவிளை தெய்வி முருகன் கோயிலிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com