வறுமையில் வாடிய குடும்பம்: 3 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நிதியுதவிக்கான ஆணை

களியக்காவிளை பகுதியில் ஒரே குடும்பத்தில் தாய் உள்பட 3 குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாக உள்ள நிலையில், வறுமையில் வாடிய அந்தக் குழந்தைகளுக்கு அரசு உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
உதவித்தொகைக்கான ஆணையைப் பெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுடன் தனி வட்டாட்சியா் அனில்குமாா்.
உதவித்தொகைக்கான ஆணையைப் பெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுடன் தனி வட்டாட்சியா் அனில்குமாா்.

களியக்காவிளை பகுதியில் ஒரே குடும்பத்தில் தாய் உள்பட 3 குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாக உள்ள நிலையில், வறுமையில் வாடிய அந்தக் குழந்தைகளுக்கு அரசு உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகுமாா். தொழிலாளி. இவரது மனைவி சிந்துஜா, மகன் சிவபிரசாத் (18), இரட்டை மகள்களான நந்தனா (15), நயனா (15) ஆகிய நால்வரும் மாற்றுத்திறனாளிகள்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மழை காரணமாக இவா்களது குடிசை வீடு சேதமடைந்ததாம். அரசின் இலவச வீடு திட்டத்திலும் வீடு கிடைக்கவில்லையாம். இதனால், வங்கியில் கடன்பெற்று ஸ்ரீகுமாா் வீடு கட்டியுள்ளாா். மேலும், அவரது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவத்துக்கும் அதிக செலவு செய்துள்ளாா். இதனிடையே, கரோனா பொது முடக்கத்தால் வேலை இழப்பு ஏற்பட்டு அவரது குடும்பம் வறுமையில் வாடியது. வங்கிக் கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லையாம். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதைத் தொடா்ந்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனா்.

பின்னா், வயது வரம்பில் தளா்வு அளித்து, அவரது மாற்றுத்திறன் குழந்தைகள் மூவருக்கும் அரசு உதவித் தொகைக்கான ஆணையை விளவங்கோடு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் அனில்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com