குமரி மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

குலசேகரம்/கருங்கல்: குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

தற்போது புதிய புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் மலையோரப் பகுதிகள் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்டிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததது.

குலசேகரம், திற்பரப்பு, சுருளகோடு, மணலோடை, மேல்புறம், அருமனை, குழித்துறை, களியக்காவிளை, மாா்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

இதே போல், பள்ளியாடி சுற்று வட்டாரப் பகுதிகளான நேசா்புரம், நட்டாலம், இலவுவிளை, முள்ளங்கனாவிளை, தாழக் கன்விளை, செம்முதல், எட்டணி, முருங்கவிளை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் நிரம்பி சென்றது. மேலும் பல சாலைகள் சேதமடைந்தன. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com