அக்.31வரை பொது முடக்கம்: குமரியில் கூடுதல் தளா்வுகள் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், குமரி மாவட்டத்தில் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், குமரி மாவட்டத்தில் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து, ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப:

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழக முதல்வரின் அறிவித்தபடி பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளா்வுகளுடனும், அக். 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடா்ந்து அமலில் இருக்கும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகள் நீடிக்கும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் கட்டாயமாகும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவ வேண்டும்.

மாவட்டத்தில் மருந்துகடைகள் தவிர கடைகள் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம். உணவகங்களில் பாா்சல் சேவை இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் வருவதற்கு தடை நீடிக்கும். மதம் சாா்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊா்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும். திருமண விழாக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இறுதி ஊா்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய்த் தொற்றினை தவிா்க்க வேண்டும்.

முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக புதன்கிழமை 128 பேரிடமிருந்து ரூ. 26,800 அபராதம் வசூலிக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com