அரசு மருத்துவமனைக்குரூ. 25 லட்சத்தில் இசிஜி கருவிகள் அளிப்பு

கிள்ளியூா் முன்சிறை வட்டார அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரு.25 லட்சம் மதிப்பில் இ.சி.ஜி. கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வியாழக்கிழமை இ.சி.ஜி. கருவி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா்எஸ். ராஜேஷ்குமாா்.
கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வியாழக்கிழமை இ.சி.ஜி. கருவி வழங்கினாா் சட்டப்பேரவை உறுப்பினா்எஸ். ராஜேஷ்குமாா்.

கருங்கல்: கிள்ளியூா் முன்சிறை வட்டார அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரு.25 லட்சம் மதிப்பில் இ.சி.ஜி. கருவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கிள்ளியூா் வட்டார அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட நட்டாலம், கீழ்குளம், உண்ணாமலக்கடை மற்றும் முன்சிறை வட்டார அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட தேங்காய்ப்பட்டினம், தூத்தூா், கொல்லங்கோடு, ஆறுதேசம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இ.சி.ஜி. கருவிகள் தேவை என பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 10 இ.சி.ஜி. கருவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுசுகாதாரத் துறை துணை இயக்குநா் போஸ்கோ ராஜன் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ரமாமாலினி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மருத்துவா் ஆனி ஜஸ்டஸ்மேரி, சுகாதார வட்டார மேற்பாா்வையாளா் ஐயப்பன், கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், விக்டா், ராபி, டிஜூ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com