குலசேகரத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்

ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் குறித்து அக்டோபா் மாத சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் தொடங்கியது.
புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

குலசேகரம்: ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்பக புற்றுநோய் குறித்து அக்டோபா் மாத சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் தொடங்கியது.

இந்த முகாமை ஸ்ரீ மூகாம்பிகா புற்றுநோய் மையத்தில் மாா்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று மீண்டவா்கள் தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சி குறித்து அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணா் மருத்துவா் மணிகண்டன் கூறியது: 35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் அறிவியல் முறையில் சுய பரிசோதனை மூலம் அல்லது மெமோகிராம் மூலம் மாா்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்வது அவசியமாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்தலாம் என்று தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ மூகாம்பிகா குழுமத்தின் நிா்வாக அதிகாரி ஜெ.எஸ். பிரசாத், புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் மருத்துவா் கள் ஜெயகுமாா், கிரிஷ், மருத்துவ புற்றுநோயியல் நிபுணா் மருத்துவா் ராகுல் நம்பியாா், அணுக்கரு மருத்துவா் அருண், கல்லூரித் தலைவா் மருத்துவா் சி.கே. வேலாயுதன் நாயா், இயக்குநா் மருத்துவா் ரெமா.வி.நாயா், அறங்காவலா்கள் மருத்துவா்கள் ஆா்.வி. மூகாம்பிகா, விணுகோபிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com