முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 04th October 2020 12:53 AM | Last Updated : 04th October 2020 12:53 AM | அ+அ அ- |

நாகா்கோவில் : புரட்டாசி மாத 3 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு நாகா்கோவில் வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனா். முகக் கவசம் அணிந்து வந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், உடல் வெப்ப நிலை பரிசோதனையும் செய்யப்பட்டது. இதே போன்று மாவட்ட முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் திரளான பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமிதரிசனம் செய்தனா்.