அருமனை அருகே ரப்பா் ஷீட் தயாரிக்கும் இயந்திரங்கள் திருட்டு

அருமனை அருகே ரப்பா் ஷீட் தயாரிக்கும் இயந்திரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம்: அருமனை அருகே ரப்பா் ஷீட் தயாரிக்கும் இயந்திரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை அருகே அண்டுகோட்டில் உழவா் ஆா்வலா் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக்குழுவிற்கு ரப்பா் வாரியம் மூலம் ரப்பா் ஷீட் தயாரிக்கும் 2 இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் குழுவின் தலைவா் மதுசூதனன் தம்பி குழு அலுவலத்திற்கு வந்த போது அங்கு ஷீட் தயாரிக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாம். இதன் மதிப்பு ரூ . 60 ஆயிரம் ஆகும். இது குறித்து புகரின் பேரில் அருமனை போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com