கருங்கல்லில் வங்கியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

கருங்கல் அருகே செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கருங்கலில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
கருங்கலில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

கருங்கல் அருகே செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் கருமா விளை பகுதியில் செயல்பட்டு வரும் யூனியன் பாங் ஆப் இந்தியா வங்கியில் நகை மதிப்பீட்டளராக பணியாற்றி வந்த பாலாஜி என்ற பாலசுப்பிரமணியம்(27). இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் போதைப்பொருள் வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். பின்பு அவரை  வங்கி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தனர்.

இந்நிலையில் வங்கி மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் இவர் பணியாற்றியபோது மக்கள் அடமானம் வைத்திருந்த நகைகளை மதிப்பீடு செய்ய தனி அதிகாரிகளை நியமனம் செய்து நகை மதிப்பீடு செய்தபோது 33 நபர்கள் வைக்கப்பட்டிருந்த நகைகளில் போலி நகைகளை வைத்து 65 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல் தெரிந்து அவர்கள் வைத்திருந்த நகைகளை திரும்பப் பெற கேட்டபோது வங்கி மேலாளர் நகைகளை திரும்பக் கொடுக்காமல் நகை அடமானம் வைத்த 33 பேர் மீது கருங்கல் காவல்நிலையத்தில் போலி நகைகளை வைத்து பணத்தை பெற்றதாக புகாரையும் அளித்துள்ளார். 

இந்த நிலையில் நகை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை கைது செய்யவோ அவர் நடத்திய மோசடியைக் கண்டுபிடிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும் 33 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், உண்மையான நகைகளை திரும்ப வழங்க கேட்டும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கிள்ளியூர் எம்.எல்.ஏ  ராஜேஷ்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com