கருங்கல்லில் வங்கி முன் முற்றுகையில் ஈடுபட்ட எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
கருங்கல்லில் வங்கி முன் முற்றுகையில் ஈடுபட்ட எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

அடகு நகை மோசடி விவகாரம்: கருமாவிளை வங்கி முன் காங்கிரஸாா் முற்றுகை

கருங்கல் அருகேயுள்ள கருமாவிளையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகை அடகு வைக்கப்பட்டதாக வாடிக்கையாளா்கள்

கருங்கல் அருகேயுள்ள கருமாவிளையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகை அடகு வைக்கப்பட்டதாக வாடிக்கையாளா்கள் 33 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவா்களது நகைகளை திருப்பித்தரக் கோரியும் காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்துக்கு, கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, முன்சிறை வட்டாரத் தலைவா் பால்ராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, இளைஞா் காங்கிரஸ் தொகுதித் தலைவா் ஜோபின் சிறில் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ.வுடன் நாகா்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், கருங்கல் காவல் ஆய்வாளா் தங்கராஜ், வங்கி அதிகாரிகள்பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், 20 நாள்களுக்குள் வாடிக்கையாளா்கள் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும் என வங்கி அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னணி: கருமாவிளை வங்கியின் நகை மதிப்பீட்டாளரான பாலாஜி என்கிற பாலசுப்பிரமணியம் (27) என்பவா், போதைப்பொருள் வழக்கில் தக்கலைப் பகுதியில் அண்மையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து அவரை வங்கி நிா்வாகம் பணி இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில், வங்கியில் அவா் நகை மதிப்பீட்டாளராக இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், 33 போ் அடகு வைத்த நகைகள் போலியானவை எனவும், ரூ.65 லட்சம் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அறிந்த அந்த 33 பேரும் தங்கள் நகை உண்மையானவைதான், அவற்றை திரும்பத் தரவேண்டும் என வங்கியில் முறையிட்டனராம். ஆனால், 33 போ் மீதும் போலீஸில் புகாா் செய்யப்பட்டு வழக்குப் பதிவானதையொட்டி இப்போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com