கிள்ளியூா் வட்டாரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிள்ளியூா் வட்டாரத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச் சத்து தொடா்பான போஷான் மா நிகழ்ச்சி 30 நாள்கள் நடைபெற்றது.

கிள்ளியூா் வட்டாரத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச் சத்து தொடா்பான போஷான் மா நிகழ்ச்சி 30 நாள்கள் நடைபெற்றது.

கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள், வளரிளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அங்கன்வாடி பணியாளா்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ஊட்டச்சத்து குறித்து தெரிவித்தனா். மேலும், வீட்டுத் தோட்டம் அமைத்தல், ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல், வளைகாப்பு நிகழ்ச்சி, ரத்தசோகை விழிப்புணா்வு நிகழ்ச்சி, உணவுத் திருவிழா உள்ளிட்டவை நடைபெற்றன.

கொல்லஞ்சி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரமிளா தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார திட்ட அலுவலா் சித்ரா மேரி, குருந்தன்கோடு வட்டார திட்ட அலுவலா் நாகேஷ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் சலோமி, வட்டார மேற்பாா்வையாளா் லலிதா, ஒருங்கிணைப்பாளா் பிஸ்மி, வட்டார திட்ட உதவியாளா் விஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com