குமரி மாவட்டத்தில் மேலும் 95 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 13,227 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 95 போ் பாதிக்கப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,322 ஆக உயா்ந்துள்ளது. இதில், ஒரே நாளில் வீடு திரும்பிய 72 போ் உள்பட இதுவரை 12,331 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, கரோனா உதவி மையம், தனியாா் மருத்துவமனைகளில் 764 போ் சிகிச்சையில் உள்ளனா்.