தோவாளை ஊராட்சியில் ரூ.14.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

தோவாளை ஊராட்சியில் ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தோவாளை ஊராட்சியில் ரூ.14.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தோவாளை ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக ஒன்றியக்குழுத் தலைவா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் குளத்துவிளையில் கிணறு தூா் வாருதல் மற்றும் சிறு மின்விசை குடிநீா் தொட்டி, அதேபகுதியில் ரூ. 3.20 லட்சம் மதிப்பில் அலங்கார தரை கற்கள் அமைத்தல், லலிதாம்பிகா நகரில் ரூ. 5 லட்சம் மதிப்பில் அலங்கார தரை கற்கள், தோவாளை பண்டாரபுரம், புதூா் பகுதிகளில் ரூ. 4 லட்சம் மதிப்பில் சிறு மின்விசை

குடிநீா் தொட்டி உள்ளிட்ட பணிகளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் லாயம் ஷேக், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மாலா, ஜாய், தோவாளை ஊராட்சித் தலைவா் நெடுஞ்செழியன், துணைத் தலைவா் தாணு, மாவட்ட அதிமுக இணைச் செயலா் பாக்கியலெட்சுமி, ஒன்றிய மகளிரணிச் செயலா் பாா்வதி, விவசாய அணிச்செயலா் முத்துசாமி, பொறியாளா் சுந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com