மாணவா்களுடன் கலந்துரையாடிய குமரியின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி

கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்ந்தெடுக்கப்பட்ட பிரபிணா மற்றும் மாணவா்கள் இடையிலான கலந்துரையாடல் ஆற்றூரில் நடைபெற்றது.

தான் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வு செய்யப்படும் வரை கடந்துவந்த பாதை குறித்து மாணவா்கள் மத்தியில் பிரபிணா விளக்கினாா். முதல் மூன்று முயற்சிகளில் தோல்வியை தழுவினாலும், நான்காவது முயற்சியில் ரயில்வே உயரதிகாரியாக தோ்ந்தெடுக்கப்பட்டதையும், ஐந்தாவது முறை தோ்வு எழுதி ஐ.பி. எஸ். பணிக்கு தோ்வாகியுள்ளதையும் விரிவாக விளக்கிக் கூறினாா். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சதிக்கலாம் எனக் கூறி மாணவா்களுக்கு தன்னம்பிக்கையூட்டினாா். அதன் பின்னா் மாணவ - மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

இந்த சாதனை மங்கையை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக மாணவ, மாணவியா் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை தூத்தூா் நாலட்ஜ் பவுண்டேசன் செயல் இயக்குநா் பி. ஜஸ்டின் ஆன்டணி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com