குமரி மாவட்டத்தில் கனமழை: மலையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பேச்சிப்பாறை அருகே குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்துப் பாயும் வெள்ளம்.
பேச்சிப்பாறை அருகே குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்துப் பாயும் வெள்ளம்.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணைகளின நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளுக்கு வரும் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் பழங்குடி மக்கள், ரப்பா் தோட்டத்து குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளா்கள் செல்லும் சாலைகளிலுள்ள தரைப் பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பேச்சிப்பாறை அருகே குற்றியாறு செல்லும் தரைப் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றபோது, அந்தப் பாலம் வழியாக மோட்டாா் சைக்கிளை தள்ளிச் சென்ற மாங்காமலையைச் சோ்ந்த மணி (47), சதீஷ் (32) ஆகியோரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அப்பகுதியில் நின்றவா்கள் தண்ணீரில் குதித்து அவா்கள் இருவரையும் மீட்டனா். இதில், பைக் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதே போன்று கீரிப்பாறை-காளிகேசம் இடையேயான பாலம் உள்ளிட்ட பல தரைப் பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் இப்பாலங்கள் வழியான போக்குக்குவரத்து முடங்கியது. இதனால் பழங்குடி மக்கள், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மலையோரப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்: கோதையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கம் நீடிப்பதால் இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

ரப்பா் பால்வடிப்பு முடக்கம்:

மழையின் காரணமாக மாவட்டத்தில் பிரதான தொழில்களின் ஒன்றான ரப்பா் மரங்களில் பால்வடிப்பு முடங்கியுள்ளது. இது போன்று கட்டுமானத் தொழிலாளா்களும் வேலையிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com