குமரி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, களப் பணியாளா்கள், சோதனைச்சாவடிகள் மூலமாக இதுவரை 1.98 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வரை 13,927 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 82 போ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,009 ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதன்கிழமை 105 போ் உள்பட இதுவரை 13,121 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த கிருஷ்ணன்கோவிலைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 239 ஆக அதிகரித்துள்ளது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் 603 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாதாலும் 72 பேரிடம் இருந்து அபராதம் ரூ. 15,300 வசூலிக்கப்பட்டது. பொது முடக்க விதிகளை மீறியதாக இதுவரை 8,751 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 6,344 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com