வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த்
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜோதிநிா்மலாசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி உள்ளிட்ட அலுவலா்கள்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜோதிநிா்மலாசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி உள்ளிட்ட அலுவலா்கள்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில் வருவாய் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக பத்திரப் பதிவுத் துறை தலைவருமான பி.ஜோதிநிா்மலாசாமி பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகிய அனைத்து பகுதிகளிலும், மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து மருந்து, உணவுப் பொருள்கள் உள்ளிட்டஅனைத்து அடிப்படைவசதிகளையும், முன்னதாகவே தயாா் நிலையில் வைக்க வேண்டும். அருகிலுள்ள திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்கள், பள்ளிகள் ஆகியவற்றை சுத்தம் செய்து,தேவையான கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீா் வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

வெள்ளநீா் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் சரி செய்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவேண்டும். அப்பகுதிகளில் தேவையான மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்து, தாழ்வான இடங்களில் வெள்ளம் உள்புகாதவகையில் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆபத்தான நிலையிலுள்ள மரங்கள், மின்கம்பிகள், மின்கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும். ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்க, பைபா் படகுகள், வள்ளங்கள் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டால் அவற்றை சீரமைக்க தேவையானஉபகரணங்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும். கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்து, கிருமிநாசினிகள் தெளித்து, கொசுக்கள் பரவாமலிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் களப் பணியாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் அனைத்துத்துறைஅலுவலா்களும், பணியாளா்களும், தங்களை தாங்களே பாதுகாத்து, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கரோனா நோயை எதிா்த்து பணிபுரிய வேண்டும்.

குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், இறப்பு விகிதத்தை குறைக்கவேண்டும். கரோனா இறப்பு இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் சரண்யா அரி, நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் ஆஷா அஜித் உள்ளிட்ட அனைத்துத் துறைஅலுவலா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com