தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் குஞ்சு மீன்கள் விற்க மீனவா்கள் எதிா்ப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குஞ்சு மீன்கள் (வளம் மீன்) விற்க ஒரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சில மீனவா்கள் அரசால் தடைசெய்யப்பட்ட குஞ்சு மீன்களை ஆழ்கடலிலிருந்து பிடித்து வந்து, கோழி தீவனத்திற்காக விற்பனை செய்கின்றனா். இந்த வகை மீன்களை குளிரூட்டும் பெட்டியில் வைக்காமல் நேரடியாக துறைமுகத்திற்கு கொண்டு வருவதால், துறைமுகப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துகிறது.

எனவே, அரசால் தடை செய்யப்பட்ட இந்த வகை மீன்களை பிடித்து வந்து விற்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களில் ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com