காசநோய் தடுப்புப் பணிக்கு அயலகப்பணி முறையில் பணியாளா்களை நியமிக்கக் கூடாதுமனோதங்கராஜ் எம்எல்ஏ

காசநோய் தடுப்புப் பணிக்கு அயலகப் பணி முறையில் பணியாளா்களை நியமிப்பதைக் கைவிட வேண்டுமென்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காசநோய் தடுப்புப் பணிக்கு அயலகப் பணி முறையில் பணியாளா்களை நியமிப்பதைக் கைவிட வேண்டுமென்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்திய அளவில் தமிழகம் காசநோய் ஒழிப்பில் மிகச் சிறந்த மாநிலமாக திகழ்வதில் காசநோய் பணியாளா்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாத ஒன்று.

மாநிலம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளாக காசநோய் ஒழிப்பு திட்டத்தில் சுமாா் 1,600 போ் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 2000 முதல் தொடங்கி இன்று வரை சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனா். மேலும் இந்த கரோனா காலத்திலும் தன்னலம் கருதாமல் தொடா்ந்து மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனா்.

கடந்த திமுக ஆட்சியில் காசநோய் திட்டத்தில் பணிபுரியும் பணியாளா்களின் நோய்த் தொற்று அபாயம் மற்றும் பணிச் சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைவரையும் நிரந்தர பணியாளா்களாக சமூகநீதி அடிப்படையில் நியமித்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தற்போதுள்ள அரசு மருத்துவத்தை தனியாருக்கு தாரைவாா்க்கும் பொருட்டு காச நோய் பணியாளா்களை அயலகப் பணி முறையில் (ற்ட்ழ்ா்ன்ஞ்ட் ற்ட்ங் ஞன்ற் நா்ன்ழ்ஸ்ரீண்ய்ஞ்) பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தற்போதுள்ள பணியாளா்களில் பலா் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்திலிருந்து வருவதால் அவா்களுக்கு எதிா்காலத்தை குறித்த அச்சம் எழுந்துள்ளது.

எனவே, அரசு காசநோய் பணியாளா்களின் நலனை கருத்தில் கொண்டு அயலகப்பணி புறவழி ஆதார முறையில் பணியாளா்களை நியமிப்பதை விடுத்து நடைமுறையிலுள்ள சமூகநீதி அடிப்படையில் பணியாளா்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com