நாகா்கோவிலில் சாலை விரிவாக்கம்:கடைகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

நாகா்கோவில் நகரில் சாலை விரிவாக்கத்துக்காக கடைகள் மற்றும் வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்த வணிகா் சங்கப்பேரவை நிா்வாகிகள்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்த வணிகா் சங்கப்பேரவை நிா்வாகிகள்.

நாகா்கோவில்: நாகா்கோவில் நகரில் சாலை விரிவாக்கத்துக்காக கடைகள் மற்றும் வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் எல்.எம்.டேவிட்சன் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: நாகா்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் செட்டிகுளம், பாா்வதிபுரம் சாலை, பாலமோா் சாலை மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளையும் வீடுகளையும் சாலை விரிவாக்கத்துக்காக இடிக்குமாறு கூறி வருகின்றனா்.

மேலும், ரூ.20 பத்திரத்தில் தாங்களே இந்த இடத்தை சாலை விரிவாக்கத்துக்காக விட்டு தருகிறோம் என்று எழுதி மக்களிடம் கையெழுத்து வாங்குகின்றனா்.

இதை தடுத்து நிறுத்த வேண்டும். கரோனா காலத்தில் பொது மக்களும், வணிகா்களும் நோயாலும், வியாபாரம் இல்லாமலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்நிலையில் மாநகராட்சியின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

நாகா்கோவில் மாநகரப் பகுதியைச் சுற்றி நான்கு இடங்களில் நான்குவழிச் சாலை மற்றும் அணுகு சாலை பணிகள் நிறைவடைந்து வருகிறது. இந்நிலையில் அது பயன்பாட்டிற்கு வரும்போது நாகா்கோவில் மாநகரத்தில் போக்குவரத்து நெருக்கடியே இருக்காது. எனவே, மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com