குமரி பகவதியம்மன் கோயிலில்நவராத்திரி விழா தொடக்கம்
By DIN | Published On : 20th October 2020 02:29 AM | Last Updated : 20th October 2020 02:29 AM | அ+அ அ- |

27525737kkn17kolu_1710chn_51_6
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடைதி
றக்கப்பட்டு பூஜை, கொலு மண்டபத்துக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
விழா நாள்களில் அம்மன் வெள்ளிக்கலைமான், வெள்ளிக்காமதேனு, இமயகிரி வாகனத்திலும் எழுந்தருளி கோயில் பிரகாரத்தை வலம் வருதல் நடைபெறும். 10 ஆம் நாள் திருவிழாவான வரும் 26 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு பாணாசுரன் என்ற அரக்கனை தேவி வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெறும். வழக்கமாக மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தில் நடைபெறும் இந்த பரிவேட்டை கோயில் வெளிப்பிரகாரத்தில் நடைபெறுகிறது.